டிங்கி காய்சலினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை
வணக்கம். நான் தாமான் பத்தாங் மலாக்கா பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி. இப்பகுதியில் தூய்மை குன்றியிருப்பதால் மக்கள் பல சுகாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
- தாங்கள் அறிந்ததைப் போல நமது நாட்டில் டிங்கி காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நாங்கள் மட்டும் விதிவிளக்கல்ல. எங்கள் தாமானில் வசிக்கும் பல குடியிருப்பு வாசிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்நோய் பரவாமல் தடுக்க நாங்கள் பல முறை நகராண்மைக் கழகத்தின் உதவியை நாடினோம். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. இதன் காரணமாக எங்களின் தாமானில் சென்ற மாதம் இருவர் இந்நோய்க்கு பழியாகியுள்ளனர்.
- இத்தாமானில் தூய்மைக் கேட்டினால் இந்நோய் பரவிவருகிறது. நகராண்மைக் கழகம் குப்பைகளை எங்கள் தாமானுக்கு அருகே கொட்டுவதால் இங்கு நீர் தேக்கம் ஏற்பட்டு ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு டிங்கி காய்ச்சல் இங்குள்ள மக்களிடையே பரவி வருகிறது.
- மேலும், சுகாதார அமைச்சின் பரிசோதனையில் இங்குள்ள குப்பைதொட்டியில் இருந்துதான் இந்நோய் பரவி இருக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளனர். ஆதலால், தாங்கள் இக்குப்பைகளை இங்கு கொட்டுவதை நிருத்துவதுடன் இவ்விடத்தைத் தூய்மை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக